திருப்பதி கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த முதல்வர் பழனிசாமி.!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தனது குடுப்பத்தினருடன் திருப்பதிக்கு வந்தார். மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரவு 7மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலும் சாமி தரிசனம் செய்தார். அதனைதொடர்ந்து, அதிகாலையில் நடைபெற்ற வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் கலந்து கொண்ட முதல்வர், குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக தமிழக பாஜக தலைவர் முருகனும் திருப்பதியில் நேற்று காலை வழிபட்டது குறிப்பிடத்தக்கது