அரசியல்உலகம்

டிரம்ப் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் – ஜோ பைடன் எச்சரிக்கை

டொனால்டு டிரம்ப் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.

இந்தச் சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் ஒத்துழைக்கா விட்டால், இன்னும் அதிகமானவர்கள் உயிரிழக்க நேரிடும் என்று அவர் கூறினார். 30 கோடி அமெரிக்க மக்களுக்கும் தடுப்பூசியை வழங்க திட்டம் ஏதும் அரசிடம் உள்ளதாக என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இப்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானது, அதிபர் டிரம்ப் ஒத்துழைத்துச் செயல்பட்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதே என்று அவர் தெரிவித்தார்.