அரசியல்உலகம்

ஜோ பைடன் அமைச்சரவையில் 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தகவல்?

அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் ஜோ பைடனின் அமைச்சரவையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் விவேக் மூர்த்தி, அருண் மஜூம்தார் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் விவேக் மூர்த்தி தற்போது ஜோ பைடனின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் ஜோ பைடனால் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஸ்டான்போர்ட் பல்கலைகழக பேராசிரியரும், முன்னாள் அதிபர் ஒபாமாவால் 2009இல் எரிசக்தி தொடர்பான நவீன ஆராய்ச்சி திட்டங்கள் அமைப்பின் நிறுவன இயக்குநராக நியமிக்கப்படவருமான மஜூம்தார், எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.