தமிழ்நாடு

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக தலா 5 கிலோ கொண்டை கடலை.!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக ரேஷன் கடைகளில் 21ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டைக்கடலை வழங்க உணவுத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, ஜூலை முதல் நவம்பர் வரையில், 5 மாதங்களுக்கு தலா ஒரு கிலோ வீதம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு, கொண்டை கடலை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனை செயல்படுத்தும் விதமாக, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து, கொள்முதல் செய்யப்பட்டு, வருகிற 21ஆம் தேதி முதல், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக தலா 5 கிலோ வீதம் கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்பட உள்ளது.