சினிமா

நடிகர் தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினிகாந்த்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பெறும் நடிகர் தவசியை தொடர்பு கொண்டு, அவரின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்துள்ளார்.

வருத்தபடாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தவசி, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தவசி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது இந்த நிலை கண்டு அவரது ரசிகர்களும் பொதுமக்களும் பல திரை பிரபலங்களும் தொடர்ந்து அவர்களால் முடிந்த தொகையை நடிகர் தவசிக்கு அனுப்பி உதவி செய்து வருகின்றனர் .இந்நிலையில் தவசியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்துள்ளார்.