இந்தியா

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 103-வது பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103 – வது பிறந்த நாளையொட்டி, புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்திரா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள Shakti Sthal , மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.