தமிழ்நாடு

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம்பெற்றுள்ள எஞ்சிய மாணவர்களுக்கு இன்று 2ம் நாள் கலந்தாய்வு

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் நாள் கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 235 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

2-ம் நாளில் எஞ்சிய மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 7.5% இடஒதுக்கீட்டில் மொத்தமுள்ள 405 இடங்களும் இன்றைய கலந்தாய்வில் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளறுபடிகள், குற்றச்சாட்டுகளை தவிர்க்க இருப்பிடச்சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு சிறப்பு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.