உலகம்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறை

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத்தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு மேலும் 2 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டான். பிப்ரவரி மாதம் 2 வழக்குகளில் அவனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த நிலையில் மேலும் 2 பயங்கரவாத வழக்குகளில் ஹபீஸ் சயீத் உள்பட ஜமாத் உத்தவா அமைப்பை சேர்ந்த 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.