அரசியல்

குடியரசுத் தலைவர் எழுதிய புத்தங்களை வெளியிட்டார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதிய புத்தகங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வியாழக்கிழமை வெளியிட்டார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், ‘தி ரிபப்ளிகன் எதிக்’ (The Republican Ethic), ‘லோக்தந்த்ரா கே ஸ்வார்'(Loktantra Ke Swar) ஆகிய இரண்டு புத்தங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இன்று வெளியிட்டார். அதேபோன்று தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் இவ்விழாவில் கலந்துகொண்டார்.

புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘இந்த புத்தகங்கள் இந்தியாவின் தற்போதைய நிலையை எடுத்துக்கூறுகின்றன’ எனத் தெரிவித்தார்.