பெரியசோரகை பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்..
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் நங்கவள்ளி பகுதியில் உளள் பெரியசோரகை அருள்மிகு.சென்றாய பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. கோவிலின் கும்பாபிசேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
கோவிலுக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எட்பாடி பழனிசாமிக்கு நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோபுரகலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜையும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது மகா கும்பாபிஷேக விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அன்பழகன், மாவட்ட ஆட்சியர் இராமன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முதல்வர் வருகையை யொட்டி கோயில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.