இலங்கையில் பிச்சை எடுப்பதும் குற்றம், பிச்சை இடுவதும் குற்றம் என அறிவிப்பு…!
இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் டி.ஐ.ஜி அஜித்ரோஹணா, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றார்.
தினசரி சம்பளத்தின் அடிப்படையில் பலர் பிச்சை எடுப்பதாகவும், போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பதும், இடுவதும் தண்டனைக்கு உரிய குற்றம் என்று அவர் தெரிவித்தார். பிச்சை எடுப்பவர்கள் மற்றும் அளிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.