ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் : 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-வில் நக்ரோட்டா பகுதியில் உள்ள பேன் டோல் பிளாசா அருகே பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக ட்ரக்கில் வந்த வாகனத்தை மறித்துள்ளனர். அப்போது, அதிலிருந்து 4 பேர் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்களும் தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு காவலர் காயமடைந்தார். இந்த சம்பவத்தை அடுத்து ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.