தமிழ்நாடு

தமிழகத்தில் காவலர்களுக்கு வார விடுப்பு !

தமிழகத்தில் காவலர்களுக்கு, வார விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டம் – ஒழுங்கு சிறப்பு D.G.P ராஜேஷ்தாஸ், அண்மையில் காவல்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

வாரத்தின் 7 நாட்களும் பணி செய்வதால், காவலர்கள் மன உளைச்சலில் தவிப்பதாக சுட்டிக்காட்டிய காவல் அதிகாரிகள், வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு அவசியம் என வலியுறுத்தினர்.

நீண்ட நாளாக இருந்து வரும் இக்கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பும், ஞாயிற்றுக்கிழமை விடுப்பை சுழற்சி முறையில் கொடுக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.