இந்தியா

கிழக்கு லடாக் எல்லையில் படைகளை பலப்படுத்தும் சீனா

பெரும் பரபரப்பும் பதற்றமும் நிறைந்த கிழக்கு லடாக் எல்லையில் படைகளை விலக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பு நிலைகளை பலப்படுத்தும் பணியில் சீன ராணுவம் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோடு நெடுக சீனா கண்காணிப்பு கருவிகளை பொருத்தியுள்ளது. கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டிற்கு கிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் டாங்குகள் உள்ளிட்ட கனரக போர்த்தளவாடங்களின் நகர்வு தென்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் கால்வன் பள்ளத்தாக்கு, தெப்சாங் சமவெளி மற்றும் பீடபூமி இடங்களில் வீரர்கள் தங்குமிடங்களையும் சீனா அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .