இந்தியா

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்

டெல்லியில் சமீபகாலமாக காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டி வருகிறது. டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோல் எரிப்பில் ஈடுபட்டுள்ளதால் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காற்றின் தரம் மேலும் மோசமடைவதை தவிர்ப்பதற்காக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்கள் தடையை மீறி பல இடங்களில் பட்டாசு வெடித்து காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

டெல்லியில் காற்று மாசுபாட்டால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றது.

காற்றின் தரநிலை 60க்கு மேல் இருந்தாலே அது உடல்நலத்திற்கு கேடு. டெல்லியில் புகை மண்டலம் சூழ்ந்து பார்வையை மறைக்கும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டால் கண் எரிச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக டெல்லி மக்கள் புகாரளித்துள்ளனர். ஏற்கெனவே கொரோனாவால் டெல்லி திண்டாடி வரும் நிலையில் காற்று மாசு மற்றொரு பெரும் அச்சத்தை உருவாகியுள்ளது.