அரசியல்தமிழ்நாடு

அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் 30 மண்டலங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் வரும் சட்டமன்ற தேர்தல் வியூகங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டனர்.

இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியை போல சட்டமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சரும், புதிய வாக்காளர்களை அதிகம் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று துணை முதலமைச்சரும் கேட்டுக்கொண்டனர்.