அரசியல்இந்தியா

நீதிமன்ற தீர்ப்பு மற்றும் சிறைச்சாலை விதிகளின் படியே சசிகலா விடுதலை செய்யப்படுவார்!

நன்னடத்தை விதிகளின் படி சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது விடுதலையில் சிறப்பு சலுகை ஏதும் கிடையாது என கர்நாடகா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நன்னடத்தை விதிகளின் படி, சசிகலாவுக்கு 129 நாட்கள் சலுகை உள்ளதால் அந்த நாட்களை கழித்துவிட்டு அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி, பரப்பன அக்ரஹார சிறைத்துறை முதன்மை கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தார்.

ஆனால், சசிகலாவுக்காக எந்த வித சிறப்பு சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றும், நீதிமன்ற தீர்ப்பு மற்றும் சிறைச்சாலை விதிகளின் படியே அவர் விடுதல் செய்யப்படுவார் என்றும் கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தெரிவித்துள்ளார்.