அரசியல்உலகம்

அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப்பின் பிடிவாதம் பொறுப்பற்ற செயல் – ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப்பின் பிடிவாதம் பொறுப்பற்ற செயல் என்று தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

டிரம்ப்பின் அரசு நிர்வாகம் ஜோ பைடன் வெற்றிக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்க மறுத்து வருகிறது. இதனால் பைடன் தரப்புக்கு அரசு நிர்வாகப் பொறுப்பை ஏற்க விடாமல் பல்வேறு தடைகளையும் டிரம்ப் விதித்துள்ளார்.