அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் இனி பாஜகவுக்கு பின்னடைவு என்பதே கிடையாது – வானதி ஸ்ரீனிவாசன்

தமிழகத்தில், இனி பாஜகவுக்கு பின்னடைவு என்பதே கிடையாது என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்த அறிக்கையில் மத்திய அரசின் திட்டங்களை பெண்கள் வழியாக கொண்டு செல்வது தங்களின் பிரதான பணியாக இருக்கும் எனக்கூறினார். அனைத்து நிலையிலும் பெண்களுக்கு உதவும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது எனக்கூறிய வானதி, நாடு முழுவதும் உள்ள பெண்களின் பாதுகாவலராக பிரதமர் உள்ளார் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக வேல் யாத்திரையை மாநில தலைவர் முருகன் நடத்திக்கொண்டு இருக்கின்றார் என அவர் குறிப்பிட்டார். மேலும் கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து கட்சி தலைமை முறைப்படி அறிவிக்கும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.