தமிழ்நாடு

தமிழகத்தில் போலீசாருக்கு வாரம் ஒருநாள் ஷிப்ட் முறையில் விடுப்பு வழங்க வாய்மொழி உத்தரவு

தமிழகத்தில் போலீசாருக்கு வாரம் ஒரு நாள் ஷிப்ட் முறையில் விடுப்பு வழங்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

பணிச்சுமை காரணமாக காவல்துறையினர் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. காவல்துறையினர் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் வேலை செய்வதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி மற்றும் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆகியோர் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதனையடுத்து போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஷிப்ட் முறையில் விடுமுறை வழங்கப்படுவதாக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காவல்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் காவல்துறையிடம் இருந்து இதுகுறித்து எழுத்துபூர்வமான எந்த உத்தரவும் வரவில்லை. ஆதலால் இது வாய்மொழி உத்தரவாகவே பார்க்கப்படுகிறது.