இன்று தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா !
இன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், தமிழக பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும், தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து புறப்பட்டு பிற்பகலில் சென்னை வரும் அமித்ஷா மாலை 4.30 மணி அளவில் கலைவாணர் அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகளுடனும் அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது கூட்டணி குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.