Covid19உலகம்

டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அறிகுறிகள் ஏதுமில்லாததால் தன்னுடைய அறையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

42 வயதான டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு இந்த வார தொடக்கத்தில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும், மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, இளைய மகன் Barron ஆகியோர் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.