தமிழ்நாடு

சிறப்பு பிரிவினருக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வு தொடங்கியது : மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 80 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில், 41 விண்ணப்பங்களே ஏற்கப்பட்டுள்ளன.

விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 7 எம்.பி.பி.எஸ், இடங்களும், ஒரு பி.டி.எஸ். இடமும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் 10 எம்பிபிஎஸ் இடங்களும், ஒரு பிடிஎஸ் இடமும் உள்ளது.

இருபிரிவுகளிலும் 400-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், முதற்கட்டமாக தலா 50 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை முதல் பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறும்.