அரசியல்இந்தியா

டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

சென்னைக்கு இரண்டு நாள் பயணமாக வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நேற்றுச் சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தின் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நட்சத்திர விடுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அதிமுக – பாஜக கூட்டணி குறித்துப் பேச்சு நடத்தினார்.

இதேபோல் கூட்டணி குறித்து பாஜக மாநிலப் பிரதிநிதிகளுடன் இரவு முழுவதும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அவர் சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அவரை வழியனுப்பி வைத்தனர்.