தமிழ்நாடு

24 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் இராணுவ வீரர் கருப்பசாமி உடல் நல்லடக்கம்

லடாக் எல்லையில், சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் கருப்பசாமி உடலுக்கு, அவரது சொந்த ஊரில் ஏராளமோனர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி, கடந்த 19 ஆம் தேதி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல், விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சாலை மார்க்கமாக சொந்த கிராமமான தெற்கு திட்டங்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முழு ராணுவ மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க கருப்பசாமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், ராணுவ வீரர் கருப்பசாமி உடலுக்கு மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர்.