இந்தியா

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வரும் 25ம் தேதி புயல் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வரும் 25ம் தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை அல்லது மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் பலத்த மழை பெய்யும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.