அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஜன.20-ஆம் தேதி ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் – ட்விட்டர்
அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனிடம், ஜனவரி 20-ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடந்த முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், ட்ரம்ப் தோல்வியை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்நிலையில், அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான போடஸ், அடுத்த ஆண்டு பதவியேற்பின் போது பைடனிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கை 3 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.