தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டின்படி 399பேரும், சிறப்பு பிரிவு கலந்தாய்வு மூலம் 41 இடங்களும் நிரப்பப்பட்டன. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குவதையொட்டி விவர அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

முதல்நாளான இன்று தரவரிசைப்பட்டியலில் ஒன்று முதல் 361 வரை இருப்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி, 11மணி மற்றும் பிற்பகல் 2 மணி என 3 கட்டங்களாக கலந்தாய்வு நடக்கிறது.