திருவாரூர் மாவட்டத்தில் நலத்திட்டம் உதவி பெறுபவர்கள் அமர்ந்த இடத்திலேயே நேரில் சென்று உதவிய அமைச்சர் காமராஜ்
மாண்புமிகு அமைச்சர் இரா.காமராஜ் நலத்திட்டம் பெறுபவர்கள் அமர்ந்த இடத்திலேயே நேரில் சென்று உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் கணவனால் கைவிடப்பட்டோர் முதியோர் ஆகியோருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டமான உதவித்தொகை திட்டத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்க கூடிய வகையில் முதியோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு உரிய ஆணையினை இன்று தமிழக உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு இரா.காமராஜ் அவர்கள் வழங்கினார் .
நிகழ்ச்சியில் 532 பயணாளிகள் பயன்பெற்றனர் .நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சாந்தா மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பொன்னம்மாள் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் உள்ளிட்ட அதிகாரிகளும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ என் ஆர் பன்னீர்செல்வம் ஸ்ரீ கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.டி. மூர்த்தி மாங்குடி உழவர் சேவை கூட்டுறவு மைய தலைவர் பி.கே.யு மணிகண்டன் திருவாரூர் கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் எஸ் .கலியபெருமாள் எம் ஆர் பாலாஜி உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.