அரசியல்தமிழ்நாடு

தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஆளுநரை இன்று சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர். மேலும் கொரோனா, நிவர் புயல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதற்கிடையே திமுக நிர்வாகிகளும் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது