அரசியல்இந்தியா

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக 7 மாவட்டங்களில் இன்று மதியம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து இன்று மதியம் முதல் நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், இன்று பிற்பகல் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.