தமிழ்நாடு

நிவர் புயல் கரையை கடந்த பிறகும் ஆறு மணி நேரம் வலுவானதாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

நிவர் தீவிர புயல் கரையை கடந்த 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து புயலாகவும், அதற்கு 6 மணி நேரம் கழித்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும் மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் வரும் 26 ஆம் தேதி திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களில், வரும் 26ஆம் தேதி பலத்த காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கூரை வீடுகள் மற்றும் குடிசைகள், பாதிப்புக்குள்ளாவதுடன், மின் இணைப்புகள் மற்றும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப் படலாம்.