விளையாட்டு

இந்திய அணிக்கு 375 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 375 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் தந்தனர்.

வார்னர் 69 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிஞ்ச் 114 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்களும், மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 45 ரன்களும் விளாச ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளும், பும்ரா, சைனி, சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.