அரசியல்தமிழ்நாடு

முதலமைச்சர் ஆய்வை பொறுத்துக்கொள்ள முடியாமல், புலன் விசாரணை விஜயகாந்த் போல் உடையணிந்து ஸ்டாலின் ஆய்வுக்கு கிளம்புகிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக ஆட்சியை பிடிக்கும் என்ற ஸ்டாலினின் பகல் கனவு ஒருநாளும் பலிக்காது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் செம்பரம்பாக்கம் ஏரியில் நேரில் சென்று ஆய்வு செய்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், புலன் விசாரணை படத்தில் வரும் விஜயகாந்த் போல் உடையணிந்து ஆய்வு மேற்கொண்டதாக விமர்சித்தார்.