நிவர் புயலை விட தமிழக அரசு வேகமாக செயல்படுகிறது – அமைச்சர் தங்கமணி
தமிழ்நாடு அரசு நிவர் புயலை விட வேகமாக செயல்பட்டதாகவும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், 100 விழுக்காடு மின்விநியோகம் நடைபெறுவதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளான, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் வெள்ள நீர் அதிகம் சூழ்ந்ததால், மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதைத் தவிர்க்க, இனிவரும் காலங்களில், புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாகவும், அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
திருச்செங்கோட்டில், அம்மா இ-சேவை மையத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற அமைச்சர் தங்கமணி, இதனைத் தெரிவித்துள்ளார்.