இந்திய ஒருநாள் அணியில் யார்கர் நடராஜன்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்ககெனவே 20 ஓவர் போட்டிகளுக்கான அணியில் இடம் பெற்றிருந்த அவர், தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார். நவ்தீப் சைனி முதுகுவலியால் அவதிப்படும் நிலையில், தமிழக வீரர் மாற்று வீரராக இடம் பெற்றுள்ளார். இதனிடையே காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் ஷர்மா, முழு உடல் தகுதியை எட்டாததால் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன். 16 ஆட்டங்கள் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். துல்லிய யார்க்கர் பந்துகளை வீசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்களையே திணறடித்தார்.