தமிழகத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,430 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் புதிதாக 393 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 42வது நாளாக ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக 1,430 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,79,046-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 11,073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து புதிதாக 1,453 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 7,56,279-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 13 பேர் பலியானதால், மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 11,694-ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று சென்னையில் புதிதாக 393 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,14,577-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 3,837 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 2,06,897
பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் கரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 3,843-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.