தமிழ்நாடு

ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாவிட்டால் இனி பெட்ரோல், டீசல் கிடையாது – சென்னை போலீசார் அதிரடி

சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய விட்டாலோ, காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றாலோ, பெட்ரோல், அல்லது டீசல் கிடையாது என்ற பதாகைகளை வைக்க வேண்டும் என, சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பை, அந்தந்த காவல் மாவட்டங்களைச் சேர்ந்த துணை ஆணையர்கள், கண்காணித்து, அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டபட்டுள்ளது.

ஏற்கனவே, பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் சங்கம், ஹெல்மெட் அணியாவிட்டால், காரில் வருவோர் சீட் பெல்ட் அணியாவிட்டால், பெட்ரோல், டீசல் இல்லை என அறிவித்திருந்தனர்.