விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணிக்கு அபராதம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மிகவும் தாமதமாக ஓவர்களை வீசியதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் தங்களுடைய ஆட்டத்துக்கான ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய பின்ச், ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 50 ஓவரில் 374 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 50 ஓவர் முடிவில் 308 ரன்களை மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கு இடையே 2 ஆவது போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் நேற்றையப் போட்டியில் இந்திய அணி காலதாமதமாக ஓவர்களை வீசியதன் காரணமாக அபராதம் விதிக்கப்பட்டது. “ஸ்லோ ஓவர்ரேட்” காரணமாக இந்திய வீரர்களின் ஆட்ட ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.