தமிழ்நாடு

நிவர் புயல் தொடர்பான சேதங்களை கணக்கிட தமிழகம் வருகிறது மத்திய குழு

நிவர் புயல் தொடர்பான சேதங்களை கணக்கிட வருகிற 30-ம் தேதி மத்திய குழு தமிழகம் வருகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மத்திய அரசிடம் அந்த குழு அறிக்கை சமர்பிக்க உள்ளது. மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னி ஹோத்ரி தலைமையில் ஏழு பேர் கொண்ட அதிகாரிகள் குழு தமிழகம் வருகிறது.

வேளாண்மை, சாலை போக்குவரத்து, நிதி, மின்துறை, ஊரக வளர்ச்சி, நீர் மேலாண்மை, மீன்வளம் ஆகிய ஏழு துறைகளை சார்ந்த அதிகாரிகள் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்திற்கான நிவாரண தொகையை மத்திய அரசு விடுவிக்கும். தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆய்வு நடத்த மத்திய குழு திட்டமிட்டுள்ளது.