டிசம்பர் மாத பொதுமுடக்க தளர்வுகள் : முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை
கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஒவ்வொரு முறை பொதுமுடக்க தளர்வுகள் அளிப்பதற்கு முன்பாக, ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். நவம்பர் மாதத்துக்கான பொதுமுடக்கம் நாளைமறுதினத்துடன் முடிவுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், நாளுக்கு நாள் குறைந்து வருவதால், அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக் குழுவினரிடம் தனித்தனியே கருத்துகளை அவர் கேட்டறியவுள்ளார். அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடவுள்ளார்.