ஆந்திர அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு : கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையில் இருந்து மீண்டும் விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டிருப்பதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்த கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து அணையிலிருந்து தண்ணீர் இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தமிழக எல்லையில் உள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கலந்து சானாகுப்பம், கிழ்கால்பட்டறை, நெடியம் ஆகிய பகுதி வழியே மீண்டும் ஆந்திர மாநிலம் நகரி லவகுசா ஆற்றின் வழியாக திருத்தணி தாலுகா நல்லாட்டூர் என்.என். கண்டிகை வழியாக பூண்டி வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.