தமிழ்நாடு

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இருள்நீங்கி, ஒளிபிறக்கும் நாள் கார்த்திகை தீபத் திருநாள் என தமது டுவிட்டர் வலைப்பதிவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து, இன்பங்கள் ஒளியாக பரவிட வேண்டும் என வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருப்பம் தெரிவித்துள்ளார்.