தமிழ்நாடு

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை மீண்டும் தொடக்கம்

நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை திங்கட்கிழமை மீண்டும் தொடங்குகிறது.

பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதனிடையே, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 29-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த நாட்களில் ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கலந்தாய்வு நாளை முதல் தொடங்குகிறது. சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கத்தில் நாளை தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.