தமிழ்நாடு

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2ஆயிரத்து 700 கன அடி வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

35 அடி மொத்த உயரம் கொண்ட பூண்டி ஏரி, தற்போதைக்கு 33 புள்ளி 96 அடிக்கு நிரம்பியுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதமாக உள்ள நிலையில், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று மாலை வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதமாக இருந்த உபரிநீர் வெளியேற்றம், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று காலை 2ஆயிரத்து 700 கன அடிவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.