அரசியல்தமிழ்நாடு

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நாளை நடைபெறும் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாநில நிர்வாகி சுதாகர் உட்பட சிலருடன் ரஜினி ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு ரஜினி மக்கள் மன்றம் தரப்பில் கோடம்பாக்கம் போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கூட்டம் நடத்துவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், தற்போது வரை ஆலோசனை கூட்டத்தில் அனுமதி கேட்டு மண்டல அலுவலகத்தில் ரஜினி தரப்பில் விண்ணப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.