(30-11-2020) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்பட்டது.இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,524-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 வாரங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,184 வீழ்ச்சி அடைந்து உள்ளது. கடந்த 9ம் தேதி ரூ.39,376 ஆக இருந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.36,192 ஆக குறைந்துள்ளது.
அதேபோல சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.63.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ. 63,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.