Covid19தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டங்களாக அரியலூர், பெரம்பலூர் மாறியுள்ளது – தமிழக சுகாதாரத்துறை

அரியலூர், பெரம்பலூர் ஆகிய இரு மாவட்டங்கள், கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 456 பேர், குணம் அடைந்து வீடு திரும்பினர். ஒரே நாளில் மட்டும், புதிதாக ஆயிரத்து 410 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

சென்னையில் புதிதாக 385 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் உள்பட 9 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட உயிரிழக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .