விளையாட்டு

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள், டி20 தொடரிலிருந்து வார்னர் விலகல்

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகினார்.

நேற்று சிட்னியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் தவான் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது வார்னருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து 3வது ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்த வார்னர், காயம் காரணமாக விலகியிருப்பது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.