நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு மீண்டும் தொடங்கியது
நிவர் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று மீண்டும் தொடங்கியது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். தற்போதுவரை எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் மொத்தமாகவுள்ள 4,944 இடங்களில் 767 இடங்கள் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன.
இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க மூன்று பிரிவுகளில் 389 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, பொதுப் பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 521 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் கல்லூரிகளில் 328 எம்.பி.பி.எஸ். இடங்களும் உள்ளன.
பி.டி.எஸ். படிப்புகளில் அரசு கல்லூரியில் 48 இடங்களும், தனியார் கல்லூரியில் 305 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.